Tuesday, October 28, 2008

முதல் குடிமகனுக்கு..சன் டி.வி.காட்டிய மரியாதை..!

தீபாவளி தினத்தன்று..பட்சணம்..தின்று..புத்தாடை உடுத்தி..பட்டாசு வெடித்ததுப்போக..ஒவ்வொரு தமிழனும்..தொலைக்காட்சி நிகழ்ச்சியில்..தமக்கு
பிடித்தமானதை தேடி ரசித்துக்கொண்டிருந்தார்கள். நானும் தேடி..தேடி..இறுதியில்..மிகவும் எதிர்பார்த்த..,முன்னாள்..ஜனாதிபதி.டாக்டர்.அப்துல்கலாம்.,அவர்களின் பேட்டியில் காதார நின்றேன்..அங்கே..நடிகர்..,சின்னகலைவாணர்...என தன்னை மக்கள் அழைப்பதாக..கற்பித்துக்கொண்டு..நகைச்சுவையில் புதுமைகளை செய்வதாய்..பிதற்றிகொள்ளும் விவேக்..அவர்களின்..சிறுபிள்ளைத்தனமான..கூத்துகளை கண்ணுற நேர்ந்தது..

முதலில் அந்த நிகழ்ச்சியின் வடிவம் பற்றி..

நிகழ்வில்..பங்கேற்றது..இருவர்..
ஒருவர் விருந்தினர்..இன்னொருவர்..தொகுப்பாளர்..அதாவது விவேக்.

ஒரு மாமேதையை..பேட்டி காணப்போகும்..அக்கறையோ..,பொறுப்புணர்ச்சியோ..,கேள்விகளை..உருவாக்கியதில்..கவனமோ..இருந்ததாக தெரியவில்லை..! எதோ..சராசரியான ஒரு திரைப்பட..கலைஞரை பேட்டி காணும்போது...அவர் சம்பத்தப்பட்ட காட்சிகளை திரையிடுவார்கள்..
இங்கே...விருந்தாளியிடம் உரையாடல்..,இடையிடையே..விவேக்கின்..நகைச்சுவை திரைக்காட்சிகள்..(அப்துல் கலாம் அவர்களின் பெயரை பயன்படுத்தி வசனம் பேசிய காட்சிகளாய் பார்த்து..பார்த்து..கவனமாய் திரையிட்டார்கள்..)

மிக கேவலமான நிகழ்ச்சி வடிவம்..

வியாபார உத்திக்காக..ஒரு மாமனிதரை..இப்படியா கேவலப்படுத்துவது..?
திரைக்காட்சிகள் திரையிட்ட மொத்த நேரத்துக்கு..அவரிடம் இன்னும் சில உருப்படியான கேள்விகளை கேட்டிருக்கலாம்..

முதலில் இந்த நிகழ்ச்சிக்கு விவேக் எதற்காக..?
அவர் எழுதி கொடுப்பதை பேசுபவர்...
ஒரு தொழில் ரீதியான தொலைகாட்சி தொகுப்பளருக்குரிய நளினமோ..,நாசூக்கோ..,அவரிடம் மருந்துக்கும் இல்லை...!

ஒரு கேள்வியை முடித்து அடுத்த கேள்விக்கு போகும் முன்னர்..அடுத்த கேள்விக்காக..விவேக் எடுத்துக்கொண்ட லீட்..அதாவது முஸ்தீபு..ரொம்ப கேவலம்..

ஒரு திருநாளன்று..யாரும் எதிபார்க்காத..,அல்லது..எல்லோரும் விரும்பும் ஒருவரை நிகழ்ச்சிக்குள் கொண்டு வந்தமைக்காக மட்டுமே..
சன் டிவி பெருமைப்பட்டுக் கொள்ளலாமே தவிர..,நிகழ்ச்சிக்கிடையில் விவேக்கின் காட்சிகளை திரையிட முடிவெடுத்தது..அற்பதனமானது..!
அப்படி விவேக்கின் காட்சிகளைக் காடினால்தான் முன்னாள் குடிமகனின் நிகழ்சியை மக்கள் பார்ப்பார்கள் என முடிவெடுத்தது..சன் டிவியின்
அநாகரீகமான முடிவு.

ஒரு நிகழ்சியின் தொகுப்பாளராய்..விருந்தாளியிடம் உள்ள ஞானப்புதையலை..மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பாலமாக இல்லாமல்..
விருந்தாளியை..சிரிக்கப் பண்ணும்..கோமாளித்தனத்தைதான் விவேக் செய்ய நாம் பார்க்க நேர்ந்தது.(யாரை யாரோடு சேர்க்கவேண்டும்..விவஸ்தை இல்லையா..?_)

பத்ம பூஷண், பத்மவிபூஷண்..,போன்ற விருதுகள் பற்றி..கலாம் பேசிக்கொண்டே வருகிறார்..திருவாளர் விவேக்..பூஷண் என்ற வார்த்தையிலிருந்து..பூசணி காய்க்கு லீட் பிடித்து..திருஷ்டிக்கு பூசணிக்காய் உடைக்கும் மூட நம்பிக்கை பற்றி கேள்வி கேட்கிறார்..
இடையில் சேரி பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க மறுக்கும் மூடத் தனம் பற்றி ஒரு காட்சி வேறு..
எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என தெரியவில்லை..மூடத்தனம் பற்றி..அப்படி எகிறிய..சின்ன கலைவாணரின்(?) கைவிரல்களில்..
பள.பளவென்று..மின்னியது..அதிர்ஷ்ட கல் வைத்த..ஜெம்மாலஜி மோதிரங்கள்..

வெகு ஜனங்களுக்கு அப்துல்கலாம் அவர்களிடமிருந்து தேவைப்படும் விஷயங்களை வெளிக்கொணர..லாயக்கற்ற ஒரு போலியிடம்..
அப்பழுக்கற்ற அவரை உரையாட வைத்த..சன் டிவியின் வியாபார நரித்தனம்..கேலிக்குரியது..!

1 comment:

  1. எனக்கும் கூட ரொம்பக் கோபம் வந்தது நிகழ்ச்சியைப் பார்க்கும் போது...ம்ம்ம் ...இதெல்லாம் இல்லாமல் சேனல் நடத்தவே முடியாதென்னும் நிலமை இப்போது...
    அன்புடன் அருணா

    ReplyDelete