Tuesday, October 28, 2008

முதல் குடிமகனுக்கு..சன் டி.வி.காட்டிய மரியாதை..!

தீபாவளி தினத்தன்று..பட்சணம்..தின்று..புத்தாடை உடுத்தி..பட்டாசு வெடித்ததுப்போக..ஒவ்வொரு தமிழனும்..தொலைக்காட்சி நிகழ்ச்சியில்..தமக்கு
பிடித்தமானதை தேடி ரசித்துக்கொண்டிருந்தார்கள். நானும் தேடி..தேடி..இறுதியில்..மிகவும் எதிர்பார்த்த..,முன்னாள்..ஜனாதிபதி.டாக்டர்.அப்துல்கலாம்.,அவர்களின் பேட்டியில் காதார நின்றேன்..அங்கே..நடிகர்..,சின்னகலைவாணர்...என தன்னை மக்கள் அழைப்பதாக..கற்பித்துக்கொண்டு..நகைச்சுவையில் புதுமைகளை செய்வதாய்..பிதற்றிகொள்ளும் விவேக்..அவர்களின்..சிறுபிள்ளைத்தனமான..கூத்துகளை கண்ணுற நேர்ந்தது..

முதலில் அந்த நிகழ்ச்சியின் வடிவம் பற்றி..

நிகழ்வில்..பங்கேற்றது..இருவர்..
ஒருவர் விருந்தினர்..இன்னொருவர்..தொகுப்பாளர்..அதாவது விவேக்.

ஒரு மாமேதையை..பேட்டி காணப்போகும்..அக்கறையோ..,பொறுப்புணர்ச்சியோ..,கேள்விகளை..உருவாக்கியதில்..கவனமோ..இருந்ததாக தெரியவில்லை..! எதோ..சராசரியான ஒரு திரைப்பட..கலைஞரை பேட்டி காணும்போது...அவர் சம்பத்தப்பட்ட காட்சிகளை திரையிடுவார்கள்..
இங்கே...விருந்தாளியிடம் உரையாடல்..,இடையிடையே..விவேக்கின்..நகைச்சுவை திரைக்காட்சிகள்..(அப்துல் கலாம் அவர்களின் பெயரை பயன்படுத்தி வசனம் பேசிய காட்சிகளாய் பார்த்து..பார்த்து..கவனமாய் திரையிட்டார்கள்..)

மிக கேவலமான நிகழ்ச்சி வடிவம்..

வியாபார உத்திக்காக..ஒரு மாமனிதரை..இப்படியா கேவலப்படுத்துவது..?
திரைக்காட்சிகள் திரையிட்ட மொத்த நேரத்துக்கு..அவரிடம் இன்னும் சில உருப்படியான கேள்விகளை கேட்டிருக்கலாம்..

முதலில் இந்த நிகழ்ச்சிக்கு விவேக் எதற்காக..?
அவர் எழுதி கொடுப்பதை பேசுபவர்...
ஒரு தொழில் ரீதியான தொலைகாட்சி தொகுப்பளருக்குரிய நளினமோ..,நாசூக்கோ..,அவரிடம் மருந்துக்கும் இல்லை...!

ஒரு கேள்வியை முடித்து அடுத்த கேள்விக்கு போகும் முன்னர்..அடுத்த கேள்விக்காக..விவேக் எடுத்துக்கொண்ட லீட்..அதாவது முஸ்தீபு..ரொம்ப கேவலம்..

ஒரு திருநாளன்று..யாரும் எதிபார்க்காத..,அல்லது..எல்லோரும் விரும்பும் ஒருவரை நிகழ்ச்சிக்குள் கொண்டு வந்தமைக்காக மட்டுமே..
சன் டிவி பெருமைப்பட்டுக் கொள்ளலாமே தவிர..,நிகழ்ச்சிக்கிடையில் விவேக்கின் காட்சிகளை திரையிட முடிவெடுத்தது..அற்பதனமானது..!
அப்படி விவேக்கின் காட்சிகளைக் காடினால்தான் முன்னாள் குடிமகனின் நிகழ்சியை மக்கள் பார்ப்பார்கள் என முடிவெடுத்தது..சன் டிவியின்
அநாகரீகமான முடிவு.

ஒரு நிகழ்சியின் தொகுப்பாளராய்..விருந்தாளியிடம் உள்ள ஞானப்புதையலை..மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பாலமாக இல்லாமல்..
விருந்தாளியை..சிரிக்கப் பண்ணும்..கோமாளித்தனத்தைதான் விவேக் செய்ய நாம் பார்க்க நேர்ந்தது.(யாரை யாரோடு சேர்க்கவேண்டும்..விவஸ்தை இல்லையா..?_)

பத்ம பூஷண், பத்மவிபூஷண்..,போன்ற விருதுகள் பற்றி..கலாம் பேசிக்கொண்டே வருகிறார்..திருவாளர் விவேக்..பூஷண் என்ற வார்த்தையிலிருந்து..பூசணி காய்க்கு லீட் பிடித்து..திருஷ்டிக்கு பூசணிக்காய் உடைக்கும் மூட நம்பிக்கை பற்றி கேள்வி கேட்கிறார்..
இடையில் சேரி பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க மறுக்கும் மூடத் தனம் பற்றி ஒரு காட்சி வேறு..
எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என தெரியவில்லை..மூடத்தனம் பற்றி..அப்படி எகிறிய..சின்ன கலைவாணரின்(?) கைவிரல்களில்..
பள.பளவென்று..மின்னியது..அதிர்ஷ்ட கல் வைத்த..ஜெம்மாலஜி மோதிரங்கள்..

வெகு ஜனங்களுக்கு அப்துல்கலாம் அவர்களிடமிருந்து தேவைப்படும் விஷயங்களை வெளிக்கொணர..லாயக்கற்ற ஒரு போலியிடம்..
அப்பழுக்கற்ற அவரை உரையாட வைத்த..சன் டிவியின் வியாபார நரித்தனம்..கேலிக்குரியது..!

Friday, October 17, 2008

ORAM PO KOLIWOOD TRAIN VARUTHU

நேற்று நெய்வேலி...இன்று..இராமேஸ்வரம்
-----------------------------------------------
இன்று வரை தீராமல்..நாளைக்கும் எளிதில் தீர்வுக்காண்க்கூடியதாக
இல்லாத மின்சார பிரச்சினையத் தொட்டு...அதாங்க..
நம்ம கோலிவுட்டை சேர்ந்த கலை பிதாமகர்களெல்லாம் ..கர்னாடகத்துக்கு மின்சாரம் தரக்கூடாதுன்னு
கூட்டமா கோஷம் போட்டது உங்க ஞாபகத்துல இருக்கும்.

எப்பவுமே எங்க சினிமாகாரவுங்களுக்கு..எத செஞ்சாலும் ஒரு இதா செய்யணும் பாத்துக்கிடுங்க..
அதேன்..எதோ ரியாலிசமோ..தக்காளிரசமோனு..பெரியவங்க சொல்லுவாங்க பாருங்க..
அப்படி செய்யலன்னா தூக்கம் வராது அவங்களுக்கு..

மின்சார பிரச்சினையா..கர்னாடகாவுக்கு மின்சாரம் எங்க இருந்து போவுது..? அட..நம்ம நெய்வேலியிலருந்து..
அப்ப உடனே..புரொடக்ஷன் வண்டி...கேரவன்..ட்ராலி..கிரேன்..மொத்ததையும்..தூக்குங்கப்பா..
நூத்து கணக்குல் பஸ்ஸு..ஐந்து நட்சத்திர ஓட்டல்..சாப்பாடுன்னு...மொத்த கலை உலகமும்..ஊர்வலம்கட்டினாங்க
நெய்வேலிக்கு..

என் தேசத்தின்..நாளைய தலைமுறை பையனெல்லாம்..தங்கள்..கனவு நாயகர்களை கிட்டத்துல பாத்து..உவ்வேன்னு
குமட்டினதாகூட ஒரு தகவல்..எல்லாம் தீர்த்த மகிமைதான்..ரெண்டு மாநிலத்துக்கு இடைப்பட்ட பிரச்சினைக்கு 
இப்படி குரல் கொடுக்க..அன்னிக்கு..ஆண்ட..அருள்மிகு அம்மா..ஸூட்கேஸ்..ஸூட்கேசா அள்ளிவிட்டது..இந்த
உலகத்துக்கே வெளிச்சம்.

அந்த ப்ராஜெக்ட்டை முன்ன நின்னு..நடத்தினது யாரு.."நம்ம்ளோட பாசத்துக்குரிய பாரதிராஜாத்தேன்."
இப்ப முனன நின்னு நடத்தறதும்..அதே பாசந்தேன்....

சென்னைக்குள்ளாற இப்பல்லாம் எங்கிட்டு ஷூட்ட்ங்க் நடந்தாலும்..அங்க ஒரு நாளைய முதல் மந்திரி
நடிச்சிக்கிட்டிருப்பாங்கன்னா பாத்துக்கிடுங்க..

இப்ப ராமேஸ்வரத்துக்கு வருவோம்..அதெப்பிடிங்க..மாநிலத்தின் ஆளும் தலைமைக்கு...யாரையோ எதிர்க்க
தன் இருப்பை காட்டணும்னு..காட்டணும்னு நெனைக்கிறப்பல்லாம்..மட்டும்தான்..அல்லதுகாட்டணும்னு நெனைக்கிற உடனேதான்
எங்க கோலிவுட்டு காரவங்களுக்கு..டமில்..டமிலர்..இன்னும்..டம்ளர் மேல் எல்லாம்...இன உணர்வு பொங்கிவரும்..
இப்பவும் பொங்கிக்கிச்சு...

சரி...ரெண்டாயிரம் பேரு..ஒரு தனி ரயிலு..போகவர ஆயிரம் கிலோ மீட்டர் பயணம்..,தங்க..,குளிக்க,..அப்புறம்
அப்பிடி இப்பிடின்னு..என்ன தொகை வரும்னு..சும்மா கூட்டி கழிச்சி பாருங்க..இப்ப நம்ம பயக..ஈழம்..ஈழம்னு
கேக்குறாங்கால்ல..அந்த நிலப்பகுதியவே..இலங்கை அரசாங்கத்துக்கிட்ட இருந்து..வாங்கி குடுத்துடலாம்..
அம்புட்டு துட்டு ஆவும்...இது எதுக்கு..? போராட்டத்தை இங்கனையே எங்கியாச்சும் ஓரமா வச்சிட்டு போலாம்ல..


தமிழர்க்கு ஆதரவா..குரல் கொடுத்தா..அது அங்க போயி கேக்கணுமாம்..இலங்கைக்கே போயிட வேண்டியதுதான..
அது என்ன ராமேஸ்வரம்..

நான் சொல்ல வர்றது இதேன்...தமிழ்ல..நல்ல தமிழ் படமா எடுங்க..இலங்கை பிரச்சினைய மையமா வச்சி படம் எடுத்த
புகழேந்தின்னு..ஒரு டைரக்டக்கரு அத ரிலீஸ்..பண்ண முடியாம சென்சார் பிரச்சினை வந்தப்ப..கடற்கரையில திரையிடப்பட்ட
அந்த படத்தோட பிரத்தியேக காட்ச்சியை பார்த்துட்டு ஒன்னும் பண்ணமுடியாம நின்னவர்தான்..நம்ம இயக்குனர் இமயம்..
இப்படி காசு செலவு பண்ணித்தான்..போராடணும்னா...காந்தியோட போராட்டத்துக்கு..ஆயிரம் உலக் வங்கிகளால்கூட பணம்
பைனான்ஸ் பண்ணியிருக்க முடியாது...

இது உணர்வுள்ள போராட்டமா தோணல..பம்மாத்தாதேன் தோணுது..கடலலையைத் தாண்டி சத்தம் கேக்காதே...
நம்ம ஊர்ல கூட கடல் இருக்கு..இங்க இருந்து கத்தலாமே..இவ்ளோ செலவுக்கு இடையில...இந்த ரெண்டு நாள் கூத்தை
நேரடி ஒளிபரப்புன்னு ஒருதரம்..,ஒரு ஸ்பெஷல் நாளா பாத்து.ஒருதரம்..சிறப்பு நிகழ்சியா..போடறப்ப கோடி கோடியா கொட்டுமே...
கொட்டி அள்ளுங்க..அள்ளி..அள்ளி கொட்டுங்க..

அரசியல்வாதிங்க..மீடியால..ஆளுக்கொரு டிவி..நடத்தறதும்..
சினிமானடிகருங்க..பாலிடிக்ஸ்ல..கலக்கறதா நெனச்சி..ஆளுக்கொரு கட்சி நடத்தறதும்..
இங்க மாறாத வரைக்கும்...

எதுவும் மாறப்போவதில்லை.





Saturday, October 4, 2008

we have to save the culture

as we are tamilians..we should understand our historical background.
we never give up our culture